ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பெரியாறில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது.! அமைச்சர் பி.டி.ஆர் பகிரங்க குற்றச்சாட்டு.! 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பெரியாறில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது.! அமைச்சர் பி.டி.ஆர் பகிரங்க குற்றச்சாட்டு.! 

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அம்ரூத் திட்டத்தில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து 125MLD குடிநீர் பெரும் திட்டம் குறித்து தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வு கூட்டத்தில் மதுரை,தேனி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, "2016ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டுக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டும்.அதன்படி 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தான் ஜெயலலிதாவிடம் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும்  தண்ணீர் சட்டவிரோதமாக திருடப்பட்டு வருவதாக கடிதம் எழுதினேன். தண்ணீர் திருட்டு தொழிலாக நடைபெற்று வருவதை ஆதாரத்துடன் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து தண்ணீர் திருட்டு தடுக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் மீண்டும் தண்ணீர் திருட்டு நடைபெற்று வந்தது. ஆனால், இவ்வளவு நாட்கள் நடைபெற்று வந்த தண்ணீர் திருட்டு தற்போது தடுக்கப்பட்டுள்ளது.  

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர்  527 இடங்களில்  ஆயக்கட்டு அமைப்பிற்கு விரோதமாக திருடப்பட்டு வருகிறது. தண்ணீர் திருட்டிற்காக ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான   மின்சாரம் திருட்டும் நடைபெறுகிறது. பல அதிகாரிகள் கைகோர்த்து இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர்.தண்ணீர் திருட்டு குறித்து வெளிப்படை தன்மையுடன் முழுமையான  விசாரணை நடத்தப்படும்.
 
மின்சாரத்துறை,  நீர் மேலாண்மை துறை, வேளாண் துறை அமைச்சர்களிடம் தண்ணீர் திருட்டு குறித்து எடுத்துச்சென்று தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.தண்ணீர் திருட்டில் ஈடுபடுவபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.