நீர் மற்றும் நில வள மேலாண்மை பணிகள் 683.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் பெரிய கருப்பன்

கிராம் ஊராட்சிகளில் நீர் மற்றும் நில வள மேலாண்மை பணிகள் 683.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சி  வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

நீர் மற்றும் நில வள மேலாண்மை பணிகள் 683.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழக சட்டப்பேரவையில்  ஊரக  வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்பு பதிலுரை வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்,கடந்த 10 மாதங்களில் ஊரக வளர்ச்சித் திட்டம் மூலம் 21,598 குழுக்களுக்கு 32.39 கோடி ரூபாய் சூழல் நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

குக்கிராமங்களைப் ,பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும்  எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ஊரக சாலைகளை தரம் உயர்த்த  874 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  136 பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

நீர் மற்றும் நில வள மேலாண்மை பணிகள் 683. 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

ஊராட்சிகளில் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும் என்றும் இரும்பு சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முருங்கை மரக் கன்றுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ரூபாய் 115 கோடி மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுக ஆட்சியில் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகத்திட்டத்திற்கான தேவை குறைந்துள்ளதாகவும், பேருந்தில் இலவச பயணத்திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.