கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு...  சரி செய்யவில்லையென்றால் போராட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை... 

விழுப்புரம் அருகே கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு...  சரி செய்யவில்லையென்றால் போராட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை... 

விழுப்புரம் நகர் பெரிய காலனி நந்தனார் தெருவில் சாக்கடை நீரும்   குடி நீரும் கலந்து தெருக்களில் குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாக்கடை நீரானது தெருக்களில் மட்டுமில்லாமல் வீடுகளுக்குள்ளேயே தேங்கி நிற்பதால் இந்த பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சாக்கடை நீர் தேங்கி உள்ள காரணத்தால் இந்த பகுதி மக்கள் பெரும் நோய் தொற்றுக்கு உள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்த பகுதியில் சுகாதாரக் கேடு பெருமளவில் உள்ளதால் இதுதொடர்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை இந்த பகுதி மக்கள் மனு அளித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக இந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த காலகட்டத்தில் இது போன்ற நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் காரணத்தால் கொரோனா தோற்று பரவும் சூழ்நிலை உள்ளதாகவும் இதன்காரணமாக இந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில்  வாழ்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீரை அகற்ற வில்லை எனில் அடுத்த கட்டமாக இந்த பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் உள்ளிட்ட கடுமையான போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.