பணியாளர்களின் அலட்சியம்.. கிலோ கணக்கில் வீணாகும் அரிசி...

செங்கல்பட்டு ரயில் குடோனில் பணியாளர்களின் அலட்சியத்தால் கிலோ கணக்கில் வீணாகும் அரிசி.

பணியாளர்களின் அலட்சியம்.. கிலோ கணக்கில் வீணாகும் அரிசி...

செங்கல்பட்டு மாவட்டம் ராட்டிண கிணரு பகுதியில் உள்ள ரயில் குடோனில் தென்மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் விளையக்கூடிய அரிசி, மற்றும் பருப்பு வகைகள் ரயில் மூலமாக கொண்டு வந்து இறக்குவது வழக்கம். இறக்கப்படும் அரிசி, பருப்பு வகைகள் அனைத்தும் செங்கல்பட்டை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படும்.

அதோபோல் நேற்று இரவும் ரயிலில் ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் வந்த அரிசியை இன்று விடியற்காலை இறக்கியுள்ளனர். ஆனால் அரிசி மூட்டைகளை இறக்கும் போது அரிசிகள் தறையில் சிதறாமல் இருக்க முறையாக தார்ப்பாய்கள் மற்றும் பாலித்தீன் கவர்களை கீழே போட்டு மூட்டைகளை இறக்குவார்கள். ஆனால் பணியாளர்களின் அலட்சியத்தால் தார்ப்பாய்கள் எதுவும் பயன்படுத்தாமல் மூட்டைகளை இறக்கியதால் மூட்டையில் இருந்து கிலோ கணக்கான அரிசிகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு பயன் பெறக்கூடிய அரிசியை யாருக்கும் பயண்பெறாமல் வீணாகி வருகிறது. எனவே பணியாளர்கள் மூட்டைகளை இறக்கும் போது அலட்சிய தன்மை இல்லாமல் மக்களின் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு முறையாக செயல்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.