அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள்.. வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்!!

அலட்சியம் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள்.. வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்!!

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தின் அலட்சியம் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருக்குறுங்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக நெல் முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, டோக்கன் பெற்ற பின்னரே கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வருகின்றனர். ஆனால் கொள்முதல் செய்வதில் காலதாமதமும், முறைகேடும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனால் விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நெல் மூட்டைகளை திறந்த வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக கூறும் விவசாயிகள், விரைவாக கொள்முதல் செய்யப்படுவதுடன் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்துக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.