தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான் கட்டணங்களை உயர்த்தினாரா?...அண்ணாமலை கேள்வி!

தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான் கட்டணங்களை உயர்த்தினாரா?...அண்ணாமலை கேள்வி!

தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான், பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி என அனைத்து கட்டணங்களையும் உயர்த்துவாரா என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

சமீபத்தில் தமிழக அரசு பால் விலை, சொத்து மற்றும் மின்சாரக்கட்டண வரி ஆகியவற்றை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவும், அதிமுகவும் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த வகையில், தற்போது தமிழக அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு மற்றும் பால் விலை, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதையும் படிக்க: மாணவி உயிரிழப்பில் பொறுப்பின்றி பதிலளிக்கும் அமைச்சர்...ஜெயக்குமார் சொன்னது என்ன?

கேள்வி எழுப்பிய அண்ணாமலை:

அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பாஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை முதலமைச்சர் தாய் உள்ளத்தோடு செயல்படுகிறார் என்பது தான். அதை மேற்கோள் காட்டி பேசிய அவர்,  தாயுள்ளத்தோடு செயல்படும் முதலமைச்சர் தான், சொத்து வரி, பால் விலை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தினாரா? என கேள்வி எழுப்பினார். 

16 மாதங்களில் மாற்றம்:

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவினர் களத்தில் பணி செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும், தமிழகத்தில் இன்னும் 16 மாதங்களில் மாற்றம் வரப்போகிறது எனவும் மேடையில் அண்ணாமலை பேசினார்.