ஏ.ஆர்.ரகுமானை அவமதித்த PSBB பள்ளி நிர்வாகம்! வைரலாகும் வீடியோ!!

ஏ.ஆர்.ரகுமானை அவமதித்த PSBB பள்ளி நிர்வாகம்! வைரலாகும் வீடியோ!!

உலகளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் இருந்து வருகிறார். தந்தையின் இறப்பிற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறியவர், திலீப் குமார் என்ற தனது இயற்பெயரை ரஹ்மான் என மாற்றிக்கொண்டார். கடந்த 1992-இல் மணிரத்னம் அவர்களின் ரோஜா படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைத்த முதல் படத்திலே தேசிய விருதை தட்டிச்சென்றார்.

தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள், பத்ம விருதுகள், ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா, கிராமி விருதுகள், வோர்ல்டு சவுண்ட் ட்ராக் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்று குவித்து, விருதுகளின் அருங்காட்சியகமாக  இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரஹ்மானின் பழைய நேர்க்காணல் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி  வருகிறது. அந்த வீடியோ பேட்டியில் தான் படித்த பள்ளி நிர்வாகம்  தன்னை எப்படியெல்லாம் அவமான படுத்தியது என்பதை ரஹ்மான் மிக உருக்கமாக  கூறியிருப்பதாவது,"தந்தையின் இறப்பிற்கு பிறகு நானும், என் தாயும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றோம்.  

அப்போது என் தாயிடம் பள்ளி நிர்வாகத்தினர் தரக்குறைவாக பேசினார்கள்.  உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் சென்று தெருதெருவாக அலைந்து, பாட வைத்தீர்கள் என்றால், யாரவது பணம் கொடுப்பார்கள். அப்பள்ளியிலிருந்து பாதியிலே நின்று விட்டேன். நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள் அப்பள்ளியில் எனக்கு இருந்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் அசைவ உணவு உண்பவர் என்பதற்காக, சாதி ரீதியான துன்பங்களை அனுபவித்ததாகவும்" என்ற பிரபல பள்ளி நிர்வாகமே அவமானமாக பேசியதாக கண்ணில் வருத்தத்துடன், உதட்டில் புன்னகையுடன் பேசியுள்ளார் ரஹ்மான். தற்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த பிரபல பள்ளியிலும் ஏ.ஆர். ரஹ்மான்   படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.