உக்ரைனில் தொடரும் போர் பதற்றம்... சென்னை திரும்பிய மேலும் 26 தமிழக மாணவர்கள்

உக்ரைன் எல்லைகளில் சிக்கி தவித்த மேலும் 26  மாணவர்கள் இன்று  சென்னை திரும்பியுள்ளனர்.

உக்ரைனில் தொடரும் போர் பதற்றம்... சென்னை திரும்பிய மேலும்  26 தமிழக மாணவர்கள்

உலக நாடுகளின் எச்சரிப்பையும் மீறி உக்ரைன் மீது 7வது நாளாக ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள  மக்கள் பாதுகாப்பிற்காக வௌியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோரை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ்  மத்திய அரசு  மீட்டு வருகிறது. இதற்கென அரசு 4 மத்திய அமைச்சர்களையும்   தனியார் விமானங்களுடன் போர் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. 

இந்தநிலையில்  உக்ரைனின் எல்லையில் இருந்து விமானத்தில் டெல்லி வந்திறங்கிய இந்தியர்களில், 26 தமிழர்கள் சென்னை திரும்பியுள்ளனர். அவர்களை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து, வரவேற்றுள்ளார். பெற்றோர்களும் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர். கர்கீவ் மற்றும் கீவில் உள்ள தமிழக  மாணவர்களை மீட்க வேண்டும் என மாணவிகள் தெரிவித்தனர். 

தற்போது வரை 112 தமிழர்கள் உக்ரைனிலிருந்து  தமிழகம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.