செங்கல் - லை காட்டி பிரசாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள் - ட்வீஸ்ட் வைக்கும் உதயநிதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் : ' செங்கல் ' லை காட்டி பிரசாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள்

செங்கல் - லை  காட்டி பிரசாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள் - ட்வீஸ்ட் வைக்கும் உதயநிதி

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான கட்டமைப்புகள் இருந்தாலும் , விளையாட்டு வீரர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது

"அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில் கூடுதல் பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்"ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் : ' செங்கல் ' லை காட்டி பிரசாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள்.


விழிப்புணர்வு வீரர்களிடம் இல்லை

சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.சென்னை கிரீம்ஸ்  சாலையில் உள்ள லலித்கலா அரங்கில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , 

உதயநிதி ஸ்டாலின் போட்டி

விளையாட்டு வீரர்களுக்கு போதுமான கட்டமைப்புக்கள் தமிழகத்தில்  இருக்கிறது, ஆனால் கட்டமைப்புகள் குறித்த  விழிப்புணர்வு வீரர்களிடம் இல்லாமல் இருக்கிறது . விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். அனைத்து விளையாட்டுகளுக்கும் போதுமான பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். 

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்காததை கண்டித்து கடந்த தேர்தலில் செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்திருந்தேன் . மீண்டும் அதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள்.  


 

எனக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சிஎன்னுடைய  3, 4 புகைப்படங்கள் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. புகைப்பட கலைஞர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணியை தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. 

நேரு விளையாட்டு  அரங்கில் விளையாட்டு பயிற்சி நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது , நேரு விளையாட்டு அரங்கில் உயர்கோபுர  மின்விளக்குப் பயன்பாடு இல்லாத நேரத்தில் , மாற்று மின் விளக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய மின் விளக்குகளை பொருத்துவது தொடர்பாக விரைவில் முடிவு  செய்யப்படும்.ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்திற்கு நான் கண்டிப்பாக செல்வேன்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு நடைபெறும் - அப்பாவு அறிவிப்பு

 ஆதித்ய தாக்கரே சந்திப்பு

ஆதித்ய தாக்கரேயை நேற்று மரியாதை நிமித்தமாகவே நான் சந்தித்தேன் , ஆதித்ய தாக்கரே எனக்கு  வாழ்த்துகளை தெரிவித்தார் , தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டினார் என்று கூறினார்.