இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!! வளசரவாக்கத்தில் பரபரப்பு

இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!! வளசரவாக்கத்தில் பரபரப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 147வது வார்டில், இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வளசரவாக்கம் 147வது வார்டில், அமைக்கப்பட்டுள்ள  வாக்குச்சாவடி ஒன்றில்  வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் பெயர் மாறி இருந்ததாக கூறப்படுகிறது.

வேட்பாளர் இதுகுறித்து தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பெயர் திருத்தம் செய்யப்பட்ட வாக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது.