தமிழகத்தில் கடத்தப்பட்ட திமிங்கலத்தின் வாந்தி,. 2 கிலோ வாந்தி 2 கோடி ரூபாயாம்.!   

தமிழகத்தில் கடத்தப்பட்ட திமிங்கலத்தின் வாந்தி,. 2 கிலோ வாந்தி 2 கோடி ரூபாயாம்.!   

திமிங்கலங்கள் உண்ண உணவு ஏதும் அஜீரணமானால் அது உணவை வாந்தி எடுக்கும். திமிங்கலத்தின் வாந்தி மிகவும் விலைமதிப்பானது. அதிலிருந்து விலைஉயர்ந்த வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. அது உலகில் மிகவும் அரிதாக கிடைக்கும் பொருள் என்பதால் பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க சிலர் தயாராகயிருக்கிறார்கள். அந்த வாந்தியை அம்பர்கிரிஸ் என்று அழைக்கிறார்கள். 

இந்நிலையில் திருச்செந்தூரில் காரில் கொண்டுவரப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற அரிய வகை  திமிங்கிலத்தின் வாந்தி அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஷ்ன் மதிப்பு 2 கோடியாகும். தமிழகத்திலேயே முதல் முறையாக கடத்த முயன்ற அம்பர்கிரிஷ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.