ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது.

ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது.ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இதில், நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன், அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதா ஆளுநர் அலுவலகத்தில் இன்னும் கிடப்பில் கிடப்பதாகவும், இது வாக்களித்த மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு அல்ல என்று குறிப்பிட்ட அவர், ஆளுநருக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் தீர்மானிக்கப்படும் சட்ட முன் வடிவுகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும், அரசியல் கொள்கை முடிவுகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என்பதை அரசியல் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் சிந்தனைச்செல்வன் குறிப்பிட்டார்.