விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியவில்லை :  பொதுமக்கள் திடீர் சாலை மறியல் !!

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாததால் மனமுடைந்த கிராம மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியவில்லை :  பொதுமக்கள் திடீர் சாலை மறியல் !!

துண்டிக்கப்பட்ட மின்சாரம் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமபுரம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இன்று காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 8 மணி வரை நீடித்தது. இத்தகைய நிலையில் இக்கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினையும் கொண்டாட முடியாத சூழல் உருவானது.      

மேலும் படிக்க : தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் : எல். முருகன் குற்றச்சாட்டு !!

சாலை மறியல் : இதனால் ஆத்திரம் அடைந்த இராமபுரம் கிராம மக்கள் தமிழக அரசை கண்டித்தும், செயல்படாத மின்வாரியத்தை கண்டித்தும் சவளாக்காரன் என்கிற இடத்தில் திடீரென மாலை 5 மணிக்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சாலை மறியல் போராட்டம் இரவு 9 மணி வரை நீடித்தபோதிலும் மின்சாரத்தை வழங்க மின்வாரிய ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்துறையினர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் மின்சாரம் வழங்கினால் மட்டுமே சாலைமறியல் போராட்டத்தை விளக்கிகொள்ள முடியும் என்றனர்.  சாலைமறியல் போராட்டத்தால் மன்னார்குடி – நாகப்பட்டிணம் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.