என்னை வம்பிழுக்க வேண்டாம்!- நிருபர்களைத் தவிர்த்த ஆதீனம்!

திமுகவின் ஆர் ராசா சர்ச்சை பேச்சுக்கு தங்களது கருத்து என்ன என நிருபர்கள் கேள்விக்கு என்னை வம்பு இழுக்க வேண்டாம் எனபதில் அளிக்க மறுத்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்ற மதுரை ஆதீனம்.

என்னை வம்பிழுக்க வேண்டாம்!- நிருபர்களைத் தவிர்த்த ஆதீனம்!

மதுரை ஆதீனம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள கிருபா புரீஸ்வரர் சிவன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.ராசா சமீபத்தில் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தங்களது கருத்து என்னவென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்வி வரும் என எதிர்பார்த்து இருந்த மதுரைஆதீனம், “இந்த கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது” எனவும், என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம் எனவும் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். இந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என செய்தியாளர்கள் தெரிவித்ததற்கு, செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | ஆ. ராசாவுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம்!!!

முன்னதாக சாமி தரிசனம் செய்வதற்காக திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயிலுக்கு வந்தவர், தயக்கத்துடனே உள்ளே வந்தார். உள்ளே வந்தவரை அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் கோயில் குருக்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.

இருப்பினும், அவர் கருவறைக்குள் செல்வதற்கு தயக்கம் காட்டி அப்படியே வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்தார். அரசு கோவில் என்பதால் நான் உள்ளே வரக்கூடாது. உள்ளே வந்தால் பிரச்சனை ஏற்படும் என தெரிவித்து, ஆரம்பத்திலேயே பயந்தபடியே அனைத்து இடங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.

மேலும் படிக்க | பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா விசாரணையும் கைதும் ஆலோசனையும்!!!