கிராம மக்கள் திடீர் சாலை மறியல்... போக்குவரத்தை சீர் செய்ய வலியுறுத்தல்...

வெங்கக்கல்பட்டி அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால், இதற்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கிராம மக்கள் திடீர் சாலை மறியல்... போக்குவரத்தை சீர் செய்ய வலியுறுத்தல்...

கரூர்-திண்டுக்கல் சாலையும், திருச்சி செல்லும் இணைப்பு சாலையும் இணையும் இடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வெள்ளியணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக கரூர் செல்லும் மக்கள் மேம்பாலத்தை கடந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

அதேநேரம், திருச்சியில் இருந்து கரூர் செல்லும் மக்கள், மேம்பாலத்தை சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் இருந்து, கரூர் செல்லும் கனரக வாகனங்கள் மேம்பாலத்தை சுற்றிச் செல்லாமல், பழுதடைந்த தடுப்புகள் மீது ஏறி இறங்கி, குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன.

இதனால், அடிக்கடி விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனைக் கண்டித்து, வெங்கக்கல்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  அப்பகுதியில் சுமார்  ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.