தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்
தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு-க்கு இன்று கே.எஸ்.அழகிரி எழுதிய கடிதம் எழுதியுள்ளார். அதன்படி,
 
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவஎஸ்.ராஜேஷ்குமார், கொறடாவாக எஸ்.விஜயதரணி, துணை கொறடாவாக ஜெ. எம்.ஹெச்.ஹசன் மௌலானா, செயலாளராக ஆர். எம்.கருமாணிக்கம், பொருளாளராக ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
இவ்வாறு கே.எஸ். அழகிரி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.