சொகுசு கார் இறக்குமதி வரி வழக்கு... விஜய்யின் மேல்முறையீடு மனு இன்று விசாரணை...

சொகுசு கார் இறக்குமதிக்கான நுழைவு வரியை ரத்து செய்ய கோரி நடிகர் விஜய் மேல் முறையீடு செய்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

சொகுசு கார் இறக்குமதி வரி வழக்கு... விஜய்யின் மேல்முறையீடு மனு இன்று விசாரணை...
நடிகர் விஜய் 2012 ஆண்டு, வெளிநாட்டில் இருந்து வாங்கிய தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  சமீபத்தில் வழக்கை தள்ளுபடி செய்ததோடு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
 
மேலும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.