"என் உயிர் உள்ளவரை கட்சியை காப்பாற்றுவேன்" உணர்ச்சி பொங்க பேசிய எடப்பாடி!

"என் உயிர் உள்ளவரை கட்சியை காப்பாற்றுவேன்" உணர்ச்சி பொங்க பேசிய எடப்பாடி!

அடுத்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தின் அருகில் திரண்ட அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து, ஈபிஎஸ் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதையும் படிக்க : முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்! மாணவ, மாணவிகளுடன் உணவருந்திய உதயநிதி!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும், தனது உயிர் உள்ள வரை அதிமுகவை கட்டுகோப்புடன் காப்பாற்றுவேன் என்றும் உணர்ச்சி பொங்க கூறினார்.  

தொடர்ந்து பேசியவர், அடுத்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி  நம்பிக்கை தெரிவித்தார்.