தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை... வணிகர்களுக்கு விக்கிரமராஜா எச்சரிக்கை...

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை... வணிகர்களுக்கு விக்கிரமராஜா எச்சரிக்கை...
சென்னை வடபழனியில் வணிகர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து தூய்மைப் பணியாளர்கள், நலிவுற்ற பொது மக்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது தமிழகத்தில் குரலில் சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை பொதுமக்கள் தவறான முறையில் பயன்படுத்தாமல் முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை கருதி செயல்பட வேண்டும் என்றார்.  
 
அதேபோல் வணிகர்கள் கட்டாயம் அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என்றார். மேலும் வணிகர் சங்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.