
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான நபர்கள் auvcnodalofficer@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் ஜூலை 31-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள தேடல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கும் தபால் வாயிலாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.