”வெற்றிமாறன் பெரியாரின் பேரன்”.. பற்றி எரியும் பேச்சு.. திருமாவளவன் ஆதரவு..!

இந்துக்களை இழிவுபடுத்தி விட்டதாக வெற்றி மாறனுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகிறது..!

”வெற்றிமாறன் பெரியாரின் பேரன்”.. பற்றி எரியும் பேச்சு.. திருமாவளவன் ஆதரவு..!

வெற்றிமாறனின் பேச்சு:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவை திராவிடம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு தற்போது மதசார்பற்று இருப்பதாக தெரிவித்தார். 

ராஜராஜ சோழன் இந்துவா?

கலையில் அரசியல் இருந்தால் மட்டும் தான் நம்மிடம் உள்ள அடையாளங்களை நம்மிடம் தக்க வைக்க முடியும் எனக் கூறியவர், திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள், ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று கூறுகிறார்கள், இப்படி நமது அடையாளங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் வெற்றிமாறன். 

கொளுந்து விட்டு எரிந்த சமூக வலைதளம்:

வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு, சினிமா உலகில் மட்டுமின்றி பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. வெற்றிமாறன் கூறுவதோ, ராஜராஜ சோழன் காலத்தில் சைவ, வைணவ என இரண்டு பிரிவினர் தான் இருந்தார்கள் இந்து என்ற மதமே கிடையாது என்ற பார்வையில் இருந்து. 

ஆதரவும், எதிர்ப்பும்:

இந்து மதத்தையே அவர் இழிவு படுத்துகிறார் என்பது போன்று பலரும் அவருக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 
இது ஒருபுறம் என்றால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் பலரும் வெற்றி மாறனுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் கருத்து: 

அந்த வகையில், விசிக தலைவர் தொ.திருமாவளவனும் வெற்றிமாறனை புகழ்ந்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். 

வெற்றிமாறன் பெரியாரின் பேரன்:

இந்நிலையில் ”1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று குறிப்பிட்டுள்ளார்.