உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்... பின்னணி என்ன?

உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்... பின்னணி என்ன?

ச.ம.க தலைவர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவ 2 டன் உணவுகளை வழங்கினார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வரும் நிலையில் அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்காமல், திமுகவிடம் ஒப்படைத்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.