இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக தொண்டனுக்கு வைகோ இரங்கல்...

சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள தாழையூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளரான தங்கவேல் என்பவர் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை தாள முடியாமல் நேற்று காலையில் தி.மு.கழக அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளித்து மாண்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் ஆராத் துயரமும் கொண்டேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள | இந்தி எதிர்ப்பு....! அன்று முதல் இன்று வரை!! நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்!

இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து கீழப்பழுவூர் சின்னச்சாமியை பற்றி உயிர் குடித்த தீ, இன்று தங்கவேல் அவர்களின் உயிரையும் பறித்தெடுத்த கொடுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது, ஒன்றிய பா.ஜ.க. அரசு இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்குமா? இந்தித் திணிப்பை, சமஸ்கிருத மொழி திணிப்பை நாள்தோறும் செய்து வருவதை நிறுத்திக்கொள்ளுமா? என்ற உணர்வு தமிழ் மக்களின் நெஞ்சில் தணலாய் கொதித்து எழுகிறது.

அன்னைத் தமிழ் மொழியைக் காப்பதற்காக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வல்லாதிக்கத்தை நிறுத்துவதற்காக தீக்குளித்து தன் மூச்சை நிறுத்திக்கொண்ட அந்தத் தியாக மறவன் தங்கவேல் அவர்களுக்கு என் வீர வணக்கத்தை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.கழக தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஏற்கனவே ஏராளமான தீரர்களை நாம் இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது. போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையை நான் வழிமொழிகிறேன்.

100 Best HBD Vaiko Images, Videos - 2022 -           </div>

          <!--Optional Url Button -->
          
          <!--Optional Url Button -->
          
          
          <!--div class= <--?php if (!empty($post_tags)): ?>

<--?php echo trans("post_tags"); ?>

<--?php endif; ?>

கொளத்தூர் அருகே பள்ளி சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியதில், காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் வெற்றி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படிக்கும் மாணவி இவாஞ்சிலின்.பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார் அப்போது, பள்ளி வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கரவாகனம், சிறுமி மீது மோதியதில், கீழே விழுந்த சிறுமிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளி வாகனத்தில் உதவியாளர்கள் வராததே விபத்துக்கு காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் மீது மோதிய விபத்துக்குள்ளானது.  இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை திருமுல்லைவாயல் அருகே அரசு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை மாணவா்கள் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சோழம்பேடு பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவா்கள் சிலா் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை துடைப்பம் மூலம் சுத்தம் செய்தனா்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோாிக்கை எழுந்துள்ளது.


  வைகோவின் அறிக்கை

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறி உள்ளார். ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?

வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்தும், வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை.

மேலும் படிக்க | பட்ஜெட்2023: விலை அதிகரிக்கப்பட்ட பொருள்கள் vs விலை குறைக்கப்பட்ட பொருள்கள்!

உற்பத்தித் தொழில்துறை சரிவிலிருந்து மீண்டு எழ உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் துறைகள். ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 விழுக்காட்டிற்கு மேல்  ஜி.எஸ்.டி. வரி கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வெறும் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது.

மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன... நிதி ஒதுக்கீடு எவ்வளவு? |#Union Budget 2023|Union Budget for the financial year 2023-24.

நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 விழுக்காடு குறைந்திருப்பதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 விழுக்காடு வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது.

எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைப் போல இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறையினர் கோரினர். அதுபற்றிய அறிவிப்பும் இல்லை.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் இதனால் பயன்பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என்று ஒன்றிய அரசு அறிவிக்குமா? வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

  மத்திய பட்ஜெட் LIVE: புதிய வரி விதிப்பு திட்டத்தில் ரூ7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை | Union Budget 2023 LIVE News Updates, Expectations, Summary and Highlights in ...

தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் வரவு - செலவு திட்டத்தில் 7 முக்கிய கூறுகளை இலக்காக அறிவித்துள்ளார். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஏழைகளின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நிறைவேற்ற மாநில அரசுகளின் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்கிறது என்பதையும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் கூடாது. ஜி.எஸ்.டி நிதி அளிப்பதையும் தாமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தால்தான் உண்மையான நிலை தெரியும்.

மேலும் படிக்க| பட்ஜெட்2023: அறிவிக்கப்பட்ட புதிய வரிகளும் விலக்கப்பட்ட வரிகளும்

பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டங்களுக்கு 19700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் காவிரிப் பாசனப் படுகை மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டப் பணிகளை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டலாம். கூட்டுறவு சங்கங்கள் தரவு தளம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிய அரசு முழுமையாகக் கொண்டு செல்லும் நிலைதான் உருவாகும்.

ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை; ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனர் தேவநாதன் யாதவ் அறிக்கை

பட்ஜெட் 2023

பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தனி  நபருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் அழிவை நோக்கி சென்ற விவசாயத்துறையை மீட்டெடுத்து பல நல்ல திட்டங்களை தொடர்ந்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் இந்த பட்ஜெட்டில்  விவசாயத்துறையில் மேலும் மகுடமாய் விஞ்ஞானத்தை ஊக்குவிக்கவும் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் சிறப்பு நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் மீதான அக்கறையை மேலும் நிலைநாட்டியுள்ளது.

மேலும் படிக்க | பட்ஜெட் 2023: வருவாய் இரட்டிப்பாகும் விவசாயிகள் நல அறிவிப்புகள்

விவசாயத்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது விவசாயிகளுக்கு நிம்மதி பெருமூச்சியை தந்திருக்கும். பள்ளி குழந்தைகளின் அறிவை பெருக்கும் வகையில் டிஜிட்டல் நூலகங்களை அமைக்க முன் வந்திருப்பதும் அதிலும் குறிப்பாக மாநில மொழிகளில் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது மாணவர்களின் வாழ்வை நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சிறப்பாக்க உதவிடும்.  சாலை போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடியும் ஒதுக்கி பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை வளர்த்திடும். மேலும் அடிப்படை கட்டமைப்புகளுக்காக மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி நவீன இந்தியாவிற்கான அடித்தளமிட்டுள்ளது இந்த பட்ஜெட். பட்டியலின/ பழங்குடியின மாணவர்களின் கல்வியை வளப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீனமயமான இந்தியாவை கட்டமைப்பது உள்ளிட்ட அனைத்தும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் மக்களின் மனங்களை கவரும் பட்ஜெட்டாகவும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும், எதிர்கால இந்தியாவின் மாற்றத்தையும் இந்த பட்ஜெட் உறுதி செய்துள்ளதுடன் அனைத்து தரப்பினரின் தேவைகளையும் முழுமைப்படுத்திய உன்னத பட்ஜெட்டிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்…