பாஜக அரசை கண்டித்தும், தமிழக அரசை பாராட்டியும் தீர்மானம்…  

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளை மற்றும் சட்டங்களை கண்டித்தும் - தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாஜக அரசை கண்டித்தும், தமிழக அரசை பாராட்டியும் தீர்மானம்…   

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி  தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், உயர்நிலைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரனோ பேரிடரை கட்டுப்படுத்தியதற்காக தமிழக அரசையும், முதலமைச்சரையும், அரசு மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசு அமைந்த 100 நாட்களில் செயலாக்கம் செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கியதற்கும், மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவிற்கு பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் ஒருசில உறுப்பினர்களை நியமித்து இருப்பதையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை மற்றும் தமிழக பட்ஜெட்டை வரவேற்றும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு கர்நாடகத்திற்கு துணை போகக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும்  உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல் டீசல் உற்பத்தி வரி மற்றும் விற்பனை விலையை குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடல் மீன் வள மசோதாவை ஒன்றிய  அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.