விளையாட்டினால் முன்னேறும் வடுவூர் கிராமம்...!!

விளையாட்டினால் முன்னேறும் வடுவூர் கிராமம்...!!

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் நீச்சல் குளம் வருகிற நிதியாண்டிலேயே தொடங்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

உள்விளையாட்டு அரங்கம்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் தமிழகத்தில் தலைசிறந்த கபடி வீரர்களைக் கொண்டது.  இவ்வூரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது முதல் இப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கின்றனர்.  இச்சாதனைகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு நாட்டிலேயே முதன்முறையாக உள் விளையாட்டு அரங்கத்தினை அமைத்து அதனை கிராம கமிட்டி நிர்வகிக்கும் வகையில் வழங்கியது .  கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்து சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஸ்டேடியம் திறக்கப்பட்டது.

பங்கேற்றோர்:

இதனை தமிழக அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.  மாலை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர்கள் டிஆர் பி ராஜா, பூண்டி . கலைவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல் கோரிக்கை:

மாணவ மாணவியர்களை பார்த்து ரொம்ப நேரமாக காத்திருந்ததற்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறிய உதயநிதி  2020 ஆம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது இந்த பகுதி மக்கள் இரண்டு கேள்வியை முன்வைத்தார்கள் எனவும் அதில் வடுவூர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க  வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் அதனை ஏற்று தற்போது இந்த விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
 
விளையாட்டின் மூலமாக:

மேலும் இந்தியாவிலையே ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்றால் இந்த வடுவூர் விளையாட்டு அரங்கத்திற்குதான்  எனவும் வடுவூர் கிராமம் இந்திய வரைபடத்தில் முக்கிய கிராமம் எனவும் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.  விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை பெற்றுள்ளது வடுவூர் கிராமம் எனவும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தேர்வுக்கு தயாராகி  நேர்முக தேர்வில் கலந்து கொள்வார்கள் எனக் கூறிய உதயநிதி ஆனால் வடுவூர் மண் மட்டும்தான் 300 பேர் விளையாட்டு துறை மூலமாக அரசு வேலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
 
நீச்சல் குளம்:

டோக்கியோ நாடு சென்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ராஜசேகரன் நினைவாக மாராத்தான் போட்டி நடத்தப்படும்  எனவும் மன்னார்குடியில் நீச்சல்குளம் ஒன்றும் , உடற்பயிற்சி கூடம் ஒன்றும் வரும் நிதியாண்டிலேயே துவங்கபடும் எனவும் கூறிய அவர் இந்த உள்விளையாட்டரங்கம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே எடுத்துகாட்டு அரங்கமாக அமைந்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   உதயநிதி ஸ்டாலின் கூறிய நீட் தேர்வின் ரகசியம் என்ன?!!