சூடானில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்....!!

சூடானில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்....!!

சூடானில் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சென்னை வரக்கூடிய பயணிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை விமான நிலையத்திற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அறிவித்துள்ளது.

சூடானில் இருந்து இந்திய பயணிகள் வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் காவேரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்திய மக்கள் இந்தியாவிற்கும், சென்னைக்கும் வருகிறார்கள்.  இந்த நிலையில் சூடான் மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடாக இருப்பதால், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி / செல்லாத தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகள் 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் வைக்கப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக, சூடானில் இருந்து வந்த அனைத்து பயணிகளுக்கும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி நிலையை சரிபார்க்குமாறு விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும், அவர்களிடம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல, தனிமைப்படுத்துவதற்கு வசதியை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீனுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து வந்த பயணிகளின் பட்டியலையும், இதுவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அதேபோல  மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகளின் பட்டியலையும், தினசரியில் இந்த  dphepi@nic.in. இணையதளத்தில் அனுப்பி வைக்க வேண்டும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:   சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் லியோனல் மெஸ்ஸி!!