இனி பள்ளிகளிலும் தடுப்பூசி போடப்படும் - மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

இனி பள்ளிகளிலும் தடுப்பூசி போடப்படும் - மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காய்ச்சலை கட்டுப்படுத்த அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வரும் 25ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் முடிவடைய உள்ளதாக தெரிவித்தார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் கருவில் உள்ள சிசு முதல் 16 வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடப்படும் எனவும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் 12 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’

இதுவரை ஆயிரத்து 44 பேர் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் இல்லை எனவும், காய்ச்சலை கட்டுப்படுத்த அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.