சிறுவர்களுக்கான தடுப்பூசி இன்று தொடக்கம் : முகாமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சிறுவர்களுக்கான தடுப்பூசி இன்று தொடக்கம்... முகாமை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.

சிறுவர்களுக்கான தடுப்பூசி இன்று தொடக்கம் : முகாமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதற்காக தனி தடுப்பூசி மையங்களை அமைக்கவும், சிறப்பு மருத்துவ குழுவினரை பணியமர்த்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

வரும் 10ம் தேதி முதல் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,  முதியோர் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி எனப்படும் முன்னெச்சரிக்கை  தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 25ம் தேதி அறிவித்தார். சிறார் தடுப்பூசிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ‘கோவின்’ செயலி மற்றும் இணையத்தில் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்த மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி ஆறரை லட்சம் பேர் இளைய  தளத்தின் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில்  சிறார்களுக்கான தடுப்பூசி முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைக்கிறார்.