மூதாட்டிக்கு ஆசை வார்த்தை கூறி தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள்... ஒரே வாரத்தில் 2 முறை தடுப்பூசி போட்டதால் பரபரப்பு...

திண்டிவனம் நகராட்சியில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைக்க வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம் ஒரு  வாரத்திலேயே தனக்கு இரண்டாவது முறையாக  தடுப்பூசி செலுத்தி  விட்டார்கள் என்று புகார் கூறிய சம்பவம் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மூதாட்டிக்கு ஆசை வார்த்தை கூறி தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள்... ஒரே வாரத்தில் 2 முறை தடுப்பூசி போட்டதால் பரபரப்பு...

திண்டிவனம் அடுத்த விட்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பரது மனைவி கண்ணம்மாள். 75 வயதான இவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பாக அந்த கிராமத்தில் நடைபெற்ற கோவிட்  தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக  கூறப்படுகிறது . பின்பு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக அந்த கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமில் கண்ணம்மாவிற்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுவது போல் விட்லாபுரம் கிராமத்திலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை சாதாரண மருத்துவ முகாம் என்று நினைத்துக்கொண்டு உடல் வலிக்கு மருந்து வாங்கச் சென்ற கண்ணம்மாவிடம் ஆசை வார்த்தைக் கூறி சுகாதாரத் துறையினர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கண்ணம்மாவிற்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள்.

பின்பு கண்ணம்மா தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்த சுண்ணம்மாவை விவசாய நிலத்திலிருந்து வந்துக்கொண்டிருந்த கண்ணம்மாவின் மகன் சிவக்குமார் கையிலிருந்த மாத்திரையைப் பார்த்து எங்கே சென்று வருகின்றாய்? என்று கேட்டபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கண்ணம்மாள் கூறியுள்ளார்.  

இதுகுறித்து சிவக்குமார் சுகாதரத் துறையினரிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்பு தனது அம்மாவை அழைத்துக்கொண்டு திண்டிவனம் நாராட்சியில் நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் உள்ள மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் அங்கிருந்த சுகாதரத் துறை ஊழியர் ஒருவர் சிவக்குமாரை தகாத வார்த்தைகளால் பேசினார்.

அப்பொழுது தடுப்பூசி முகாமை துவக்கி வைத்துவிட்டு காரில் கிளம்ப தயாரான மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மூதாட்டியும் அவரது மகனும் புகார் அளித்தனர். மூதாட்டி ஒருவர் தனக்கு ஒரு வாரத்தில் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்தி விட்டதாக புகார் அளித்த சம்பவம் அங்கிருந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.