காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு!!!

பால் பண்ணையில் பால் வினியோகம் தாமதம் ஒப்பந்த ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில். இரவில் ,இரண்டு மணிநேர ஆய்வால் மிரண்டுபோன அம்பத்தூர் ஆவின் அதிகாரிகள்.

காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு!!!

ஆவின் பண்ணைக்கு பால் வந்து சேரும் இடம் முதல். பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு வெளியேற்றப்படும் இடம் வரை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அம்பத்தூர் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆவின் பணியாளர்களுக்கு 12 உத்தரவுகள்: நிர்வாக சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் மனோ  தங்கராஜ் அதிரடி | Minister Mano Thangaraj issued 12 directives to be  followed by the dairy ...

சென்னை அம்பத்தூர் சோழிங்கநல்லூர்  ஆவின் பால் பண்ணைகளில் கடந்த மூன்று நாட்களாக பால்  வினியோகம் தாமதமாக நடைபெறுவதாக. செய்தி   வெளியான நிலையில். நேற்று இரவு 9 மணி முதல் 11 மணிவரை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில்.  அமைச்சர் மனோதங்கராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் பண்னைக்கு தென் மாவட்டங்களிலிருந்து அம்பத்தூர் பால் பண்ணைக்கு கொண்டுவரப்படும் பால் டேங்கர் லாரியின் மேலே ஏறி ஆய்வு செய்த அமைச்சர், டேங்கர் லாரிக்கு போடப்பட்ட சீல்  முறையாக போடப்பட்டிருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார்.பால் பதப்படுத்தப்படும் பகுதி,தர பரிசோதனை மையம், பால் குளிரூட்டப்படும் இடம், பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யப்படும் பகுதி,பால்டப்களை சுத்திகரிக்கும் பகுதி, ஆவின் சந்தாதாரர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.லோடு வண்டிகளையும் ஆய்வு செய்து அமைச்சர்.கணினி வாயிலாக போடப்பட்ட பில்களை ஆய்வு செய்தார். மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் வருகை பதிவேடு, பெயர் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். குளிர் பதனப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்படும் இடத்தில் பாலத்தின் அவர்களின் தரம் மற்றும் பேக்கிங் செய்யப்படும் கருவிகள் முறையாக வேலை செய்கிறதா எனவும் ஆய்வு செய்தார்.

ஆவடி நாசரின் சீட்.. இலாக்கா மாறியவுடன் வேலையை தொடங்கிய மனோ தங்கராஜ்!  பால்வளத்துறை குறித்து மீட்டிங் | Minister Mano Thangaraj announced as the  Dairy Minister get ...

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள்...

ஆவின் நிர்வாகத்தில் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று பால் வெளியேற்றப்படுகிறது நேரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறதா. அதில்  என்னென்ன பிரச்சனைகள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளவேண்டி திடீர் ஆய்வு மேற்கொண்டதாகவும், இதன் அடிப்படையில் ஏற்கனவே 12 நிபந்தனைகள் செய்தி மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பேசிய பால் வளத்துறை அமைச்சர் அவர்கள்.கடந்த 2 மாதமாக ஒப்பந்த தொழிலாளர்கள் விடுப்பினால் ஏற்படும் பால் வினியோக தாமதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்..

மேலும் படிக்க | சரத்பாபுவின் திறமையும் திரை பங்களிப்பும் என்றும் நினைவுக்கூறப்படும் -ஆளுநர் இரங்கல்

ஆள் பற்றாக்குறை எதுவும் இல்லை: 


நான் ஆவின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு போட்ட. முதல் உத்தரவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் ஊதியத்தை வங்கிகணக்கில் தான் செலுத்த வேண்டும் என்பதுதான் . அதன் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைகளை கேட்டறிந்தோம். நிச்சயமாக இன்னும் ஓரிரு நாட்களில் முழு வீச்சில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் பணியை முறையாக செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த உள்ளதாகவும். ஆவினில் இருக்கக்கூடிய ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் அதனை நிரப்புவது தொடர்பாக மாண்புமிகு முதல்வருடன் கலந்து ஆலோசித்து.விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும்.தற்பொழுது உற்பத்திக்கு ஆள் பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும். ஆவின் நிர்வாகத்தில் தீவிரமான கட்டுப்பாடு முயற்சிகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது நிச்சயமாக நான் எடுப்பேன் என  அமைச்சர் பேசினார்.