இலவச வீட்டுமனை கோரும் ஆதிதிராவிடர்கள்...எதிர்ப்பு தெரிவிக்கும் மாற்று சமுதாயத்தினர்! வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டம்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆதிதிராவிட சமுதாயத்திற்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச வீட்டுமனை கோரும் ஆதிதிராவிடர்கள்...எதிர்ப்பு தெரிவிக்கும் மாற்று சமுதாயத்தினர்! வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டம்!!

திருத்தணியை அடுத்த ராஜாநகரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறுபுறம் இலவச வீட்டுமனைகள் வழங்குவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மனித உரிமை ஆணையத்தின் ஆணைப்படி, வருவாய்த்துறையினர் சர்வே செய்து இலவச வீட்டு மனைகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து திடீரென கிராமத்து பொதுமக்கள், அந்த இலவச மனையின் சர்வே கற்களை அகற்றினர்.  இச்சம்பவம் குறித்து விசரித்த காவல்துறையினர், கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சோளிங்கர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தனர். பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த வட்டாட்சியர் தமயந்தியையும் சிறைபிடித்தனர்.  சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் வட்டாட்சியர் மயங்கி விழுந்த நிலையில், அவரை கிராம மக்கள் விடுவித்தனர். மேலும், காவல்துறையினர் மீது கல்லெறிந்து கலவரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.