நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அவகாசம் தேவை... டிசம்பருக்குள் முடிக்க முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வார்டு மறுவரையறை பணி நடைபெறுவதால் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை முடிக்க முயற்சி செய்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அவகாசம் தேவை... டிசம்பருக்குள் முடிக்க முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை நகர்ப்புற சமுதாய நலக் கூடத்தில் திறந்து வைத்து பின் கர்ப்பிணி பெண்களுக்கு  2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்துக்கான பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என் நேரு,

பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், திமுக அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது அந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது இதனால் நகர்ப்புற உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது நீதிமன்றத்தில் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள்  அவர்களை எடுக்கும்போதே ஒப்பந்த அடிப்படையில் தான் எடுக்கிறோம் எனினும் அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தேவையானதை செய்ய தமிழக முதல்வரிடம் ஆலோசிக்கப்படும்.

இந்த நிகழ்வில்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி சுகாதாரத் துனை ஆணையர் மனீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.