நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரு மணி நிலவரப்படி சுமார் 35 % மேல் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி சுமார் 35 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரு மணி நிலவரப்படி சுமார் 35 % மேல் வாக்குகள் பதிவு -  தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் மும்முரமாக சென்று வாக்களித்து வருகின்றனர். ஒரு மணி நிலவரப்படி அதிகப்டசமாக நாமக்கல் மாவட்டத்தில் 50 புள்ளி 58 சதவீதமும், கரூரில் 50 புள்ளி 04 சதவீதமும், அரியலூரில் 49 புள்ளி 43 சதவீதமும், தருமபுரியில் 48 புள்ளி 08 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

சென்னையில் வாக்குப்பதிவானது மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக 23 புள்ளி 42 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது. பேரூராட்சிகளில் 46 புள்ளி 92 சதவீதமும், நகராட்சிகளில் 41 புள்ளி 13 சதவீதமும், மாநகராட்சிகளில் 28 புள்ளி 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 35 புள்ளி 34  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.