வெளியிடப்படாத தேர்வு முடிவு.... உயர்த்தப்பட்ட பணியிடங்கள்!!

வெளியிடப்படாத தேர்வு முடிவு.... உயர்த்தப்பட்ட பணியிடங்கள்!!

குரூப் 4 தேர்வுக்கான மறு திருத்தி அமைக்கப்பட்ட  காலி பணியிடங்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்.  குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301ல் இருந்து 10117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான மறு திருத்தி அமைக்கப்பட்ட  காலி பணியிடங்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்.  அதன்படி  வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 274 இல் இருந்து 425 ஆக உயர்ந்துள்ளது.  அதைப்போலவே ஜூனியர் இன்ஜினியர்,  பில் கலெக்டர் ஆகிய பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் மொத்தமாக 4952 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் டேபிள் பி யில் இருக்கும் ஜூனியர் இன்ஜினியர் பில் கலெக்டர் ஆகிய காலி பணியிடங்கள் 163 ல் இருந்து 252 ஆகவும் உயர்வடைந்துள்ளது.  அதன்படி குரூப் 4 தேர்வுக்கான பல்வேறு காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7301  இல் இருந்து 10117 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் தேர்வில் 18. 5 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது வரை முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000..... திமுககாரர்கள் குடும்பத்துக்கு மட்டுமா?!!