இருசக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்து அசத்திய அஜித் ரசிகர்கள்.!!

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் நாளை திரையரங்குகளில் திரைக்கு வரும் நிலையில் வேலூரில் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டாடினர்.

இருசக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்து அசத்திய அஜித் ரசிகர்கள்.!!

வேலூர் மாவட்டம் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் எப்போது திரையரங்கிற்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் நாளை  வலிமை திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிவித்திருந்தார்

அதன் அடிப்படையில் நாளை வேலூர் அலங்கார் திரையரங்கில் வலிமை திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அந்த திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்க கூடிய அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளத்துடன் மாலை அணிவித்தனர்

மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் இரு சக்கர வாகனத்தில் வீலிங் (சாகசம்) செய்யும் காட்சி ட்ரெய்லரில் வெளியாகியிருந்தன.அதேபோன்று அவருடைய ரசிகர்களும் திரையரங்கு வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.