ஜவுளித்துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்த - மத்திய அமைச்சர் பியூஷ்!!

2025-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 100 பில்லியன்  அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜவுளித்துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்த - மத்திய அமைச்சர் பியூஷ்!!

கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியை, பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணமாக கோவை மாநகரம் திகழ்வதாக கூறினார்.

கொரோனா பாதிப்பிற்கு பிந்தைய காலத்தில், இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருப்பதாக தெரிவித்தார்.

நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்தொழில் தேக்கமடைந்திருப்பது பற்றி குறிப்பிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா, பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.