ஸ்டார்ட் அப் அகாடமி விருது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர்..! நாட்டின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்!!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக, அரசின் திட்டமிடலின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு, நாட்டின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஸ்டார்ட் அப் அகாடமி விருது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர்..! நாட்டின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்!!

'தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி' சார்பில் 'ஸ்டார்ட் அப் துருவ்' விருது வழங்கும் விழா, கோவையில்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆரோக்கியம், கல்வி, ராணுவம் உள்ளிட்ட தலைப்புகளில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நடத்திய போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 10 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய  அவர், நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை மட்டும் சார்ந்திருந்திருக்க கூடாது என்ற நோக்கில், முந்தைய ஆட்சியில்  உற்பத்தி துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இது பாராட்டுதலுக்கு உரியது என்றாலும்,  நிறுவனங்களின் வளர்ச்சியை அப்போதைய அரசு மட்டுப்படுத்தி வந்ததாக அவர் மறைமுகமாக சாடினார்.  

மோடி ஆட்சியில், உற்பத்தி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் நலனுக்காக பொது துறை நிறுவனங்களுடன் தனியார் துறையும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சின்ன சின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதை உணர்ந்து, தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்த அரசு உதவி செய்வதாகவும் கூறினார்.