தமிழகத்தில் எதிர்பாக்காத அளவிற்கு குறைந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் எதிர்பாக்காத அளவிற்கு குறைந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் கொரேனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 42பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 145 ஆக குறைந்துள்ளது. 327 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனா தொற்று பாதிப்பினால் நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 23 ஆக  உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com