புதுவையில் வேலையில்லாமல் அதன் அமைச்சர்களே திண்டாடுகிறார்கள்.! திமுக எம்.பி கிண்டல் .! 

புதுவையில் வேலையில்லாமல் அதன் அமைச்சர்களே திண்டாடுகிறார்கள்.! திமுக எம்.பி கிண்டல் .! 

வேலையில்லா திண்டாட்டத்தால் புதுவை அமைச்சர்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விமர்சித்துள்ளார். 

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அமைச்சரவையில் இதுவரை தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. ஆனால் அமைச்சரவை இன்று  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்துவதில் தோல்வியை மறைமுக ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையும், தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ள நிலையில் கல்வித்துறை அமைச்சரையும் மாற்றுகிறார்கள்.

பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. அமைச்சரவையை மாற்றி அமைப்பதால் சரிவை சரி செய்துவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலில், உத்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

வேலையில்லா திண்டாட்டத்தில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. தற்போது அமைச்சர்களுக்கும் வேலையில்லா திண்டாட்டத்தை(இலாக்கா ஒதுக்காமல்) ஏற்படுத்தி உள்ளது. பதவி ஏற்ற பிறகும் எந்த துறையும் ஒதுக்காததால் திண்டாடிகேகொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.