உக்ரைன் - ரஷ்யா போர்.. கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. 122 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சென்னையில் இன்று பெட்ரோல், விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்.. கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. 122 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

இதையடுத்து கடந்த 122 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் சூழலில், போரின் முதல் நாளிலேயே கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயரவில்ல.

இந்நிலையில், சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரே நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நீடிப்பதால் வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.