தாய் தந்தையிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்..!

தாய் தந்தையிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்..!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேரனும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் 2019-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தனது தாத்தாவை போலவும், அப்பாவை போலவும் திறம்பட செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

தமிழ்நாடு  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2022) அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், துர்கா ஸ்டாலினிடமும் நேரில் சென்று வாழ்த்து பெற்றார் உதயநிதிஸ்டாலின். தனது மகனிற்கு முகமலர்ச்சியோடு கைக்குலுக்கி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com