இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து....பதைபதைக்கும் சிசிடிவி காட்சி....

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து....பதைபதைக்கும் சிசிடிவி காட்சி....

சிவகங்கைமாவட்டம் உடைய நாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது மனைவி மணிமேகலையுடன் உலுப்பகுடியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது குட்டூர் பேருந்துநிலையம் எதிரே திம்மநல்லூர் பள்ளப்பட்டி சேர்ந்த சின்னையா என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனமும், நாகராஜனின் இருசக்கர வாகனமும், நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி இரண்டு பைக்கிலும் வந்த முன்று பேரும் படுகாயமடைந்தனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார், காயமடைந்த மூன்று பேரையும் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.