திருச்சி : பச்சை மலைக்கு படையெடுத்த புதிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்...!

திருச்சி மாவட்டம் பச்சை மலைக்கு படையெடுத்த புதிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்...!

திருச்சி :  பச்சை மலைக்கு படையெடுத்த புதிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்...!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் தென்புறநாடு, கோம்பை, வன்னாடு உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ளன. இதில் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்புறநாடு, பச்சைமலை பகுதியான டாப் செங்காட்டுப்பட்டி, மங்கலம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை பட்டாம்பூச்சிகள் உலா வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, கோயமுத்தூர் இயற்கை வண்ணத்துப்பூச்சி அமைப்பினர், பச்சை மலையில் பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஆறு வண்ணத்துப்பூச்சி குடும்பங்களில் இருந்து ஸ்வாலோடேல்ஸ் வெள்ளை மற்றும் மஞ்சள் தூரிகை கால் பட்டாம்பூச்சிகள், ப்லூஸ் மெட்டல் மார்க்ஸ் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களின் சமீபத்திய மதிப்பீட்டில் 109 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பல வகையான பட்டாம்பூச்சிகள் வருகை தந்ததை தொடர்ந்து பச்சை மலைக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.