20 ஆண்டுகளாக பரிசல் பயணம்....உயர்மட்ட பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்த மக்கள்...!

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பரிசலில் பயணம் செய்ய முடியாமல் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர் அந்த பகுதி பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை அருகே உள்ள கத்தாங்கண்ணி, வயக்காட்டுபுதூர், கணபதி பாளையம், வெங்கலப்பாளையம், உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஊத்துக்குளி செல்ல வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசல் மூலமாக பயணம் செய்து வருகின்றனர். ஆற்றை கடந்து செல்ல 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதால் பரிசல் மூலமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசலில் பயணம் செய்ய முடியாமல் 10 கிலோமீட்டர் சுற்றி சென்று வருகின்றனர். இப்பகுதியில் ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.