பரபரப்பான அரசியலில் சூழலில் டெல்லி பயணம் : சென்னை திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை திரும்பினார். 

பரபரப்பான அரசியலில் சூழலில் டெல்லி பயணம் : சென்னை திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத்தலைமை என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்ப, மேடையிலிருந்து பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். தொடர்ந்து அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து முறையிடுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

ஆனால், மாறாக பாஜக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில், ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து டெல்லியில் கலந்தாலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய ஓ.பி.எஸுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். செய்தியாளர்களை சந்திக்காமல் அவர் காரில் ஏறி புறப்பட்டார்.