ஓடும் பேருந்தில் மேற்கூரையில் நடந்து சென்று பயணம்... கீழே விழுந்தபின் எதுவும் நடக்காதது போல் சாவகாசமாக எழுந்து சென்ற வாலிபர்...

மதுரை மாவட்டம் மேலூரில் ஓடும் பேருந்தின் மேற்கூரையில் நடந்து சென்றபடி பயணம் மேற்கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓடும் பேருந்தில் மேற்கூரையில் நடந்து சென்று பயணம்... கீழே விழுந்தபின் எதுவும் நடக்காதது போல் சாவகாசமாக எழுந்து சென்ற வாலிபர்...

மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று முன்தினம், மேலூரை நோக்கி செக்கடி பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் மேற்கூரையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்தபடி பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பேருந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திய போது, அந்த வாலிபர் பேருந்தின் மேற்கூரையில் இருந்து முன்பகுதியில் கீழே விழுந்து, எதுவும் நடக்காததுபோல்  சாவகாசமாக எழுந்து சாலையில் நடந்து சென்றார். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் , அவர் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியை  சேர்ந்த தேவர் என்பவருடைய மகன் சதீஷ்குமார் என்பதும், இவர் சற்று மனநலம் பாதித்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய தந்தை உயிரிழந்ததையடுத்து இறுதி சடங்கிற்காக அழைத்து வரப்பட்ட நிலையில், வீட்டிலிருந்து தப்பிச் சென்று இதுபோல் நடந்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை உறவினர்களிடம் ஒப்படைத்தை போலீசார்,  கவனமாக பார்த்து கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.