" அடையாள அட்டையின் பயன்களை திருநங்கைகள் தான் ..." - உதயநிதி ஸ்டாலின்

" அடையாள அட்டையின் பயன்களை திருநங்கைகள் தான் ..." - உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சகோதரன் அமைப்பின் 25 ஆம் ஆண்டு விழா மற்றும் திருநங்கைகளின் முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் 'லேடி அல்டிமேட் ஸ்டார்' என்ற  பட்டத்தினை திருநங்கைகள் சார்பாக, நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன், திருநங்கைகள், வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் போராட்டம் என கடந்து வந்திருக்கிறார்கள். தான் இன்று வந்ததே உங்களுக்காக தான். உங்கள் மனதில் தனக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் நடிகர் ஜெயராம், தான் இங்கு வந்தது தன் மகன் காளிதாஸுக்காக தான். வந்ததில் இருந்து உங்கள் அழகை பார்த்து வருகிறேன். காளிதாஸ் திருநங்கையாக நடிக்க உதவிய ராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் சுதா கொங்கராவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசி இருந்தார்.  

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ரொம்ப பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையகவும் உள்ளது. உங்கள் ஆற்றல்களை பார்க்கும் போது. திருநங்கைகளுக்கு நல வாரியம் கலைஞர் ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அரசு சார்பில் திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டையின் பயன்களை திருநங்கைகள் மற்றவர்களுக்கு தெரியும் படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சில திருநங்கைகள் தவறான வழிகளில் செல்கின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டையின் பயன்களை கொண்டு சேர்க்க வேண்டும். சட்டமன்றத்தின் எனது கன்னி பேச்சில் திருநங்கைகளின் கோரிக்கையை தான் பேசினேன். உங்களின் அண்ணனாக உடன் பிறந்தவனாக எப்போதும்  இருக்கிறேன் என பேசி இருந்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com