கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலவச வீட்டு மனை, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர்.

அப்போது பண்ருட்டி வட்டாட்சியரை சந்திக்குமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியரை சந்தித்தபோது, திருநங்கைகளை அவர் தரக்குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.