தேசிய கொடியை குப்பையில் வீச முயன்ற விவகாரம்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆய்வாளர் மாற்றம்...!

தேசிய கொடியை குப்பையில் வீச முயன்ற விவகாரம்:   காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆய்வாளர் மாற்றம்...!

தேசிய கொடியை குப்பையில் வீச முயன்ற காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் என்பவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் தத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டியின்போது இந்திய தேசிய கொடியை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரசிகர்கள் கொண்டு சென்ற தேசிய கொடிகளை கைப்பற்றிய காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், அவற்றை குப்பை தொட்டியில் வீச முயன்ற நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் தத்தோர் உத்தரவிட்டுள்ளார்.