புதிய அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி  

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி   
Published on: 
Updated on: 
1 min read

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதியதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்திலிருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com